உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான ஒரு திருமண முறிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணமகள் மிதிலேஷ் குமாரிக்கும், தரம் சிங் குஷ்வாஹா என்பவருக்கும் முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், புகுந்த வீட்டிற்குச் சென்ற முதலிரவிலேயே தனது கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என மணமகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்தத் திடீர் முடிவிற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, தான் ஏற்கனவே வேறொருவரை காதலிப்பதாகவும், தனது குடும்பத்தினர் தன்னை அடித்துத் துன்புறுத்தி வலுக்கட்டாயமாக இந்தத் திருமணத்தைச் செய்து வைத்ததாகவும் மணமகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் விஷயம் ரத் பொலிஸ் நிலையம் வரை சென்றது.
பொலிஸார் எவ்வளவோ சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்தார். “உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை முன்பே சொல்லியிருந்தால், இன்று இரு குடும்பங்களுக்கும் இந்த அவமானம் ஏற்பட்டிருக்காது” என மணமகன் தரம் சிங் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார். இறுதியில், சட்ட ரீதியான சிக்கல்களைத் தவிர்க்க இரு குடும்பத்தினரும் பேசி பரஸ்பர விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து மிதிலேஷ் தனது பெற்றோருடன் சொந்த வீட்டிற்குத் திரும்பினார்.
_______________________________________________________________________________________________________________________________________
A bizarre incident occurred in Hamirpur, Uttar Pradesh, where a marriage ended just hours after the ceremony because the bride refused to live with her husband. Claiming she was forced into the marriage against her will while being in love with someone else, the bride stood firm on her decision despite police mediation, leading both families to agree on a mutual separation.