உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது காஜல் மற்றும் 27 வயது முகமது அர்மான் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி 18-ம் தேதி இரவு அர்மான் தனது காதலியான காஜலைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றபோது, காஜலின் மூன்று சகோதரர்களிடம் சிக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள், இருவரையும் மண்வெட்டியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துவிட்டு, உடல்களை ஆற்றுப் பகுதியில் ரகசியமாகப் புதைத்துள்ளனர்.
இந்தக் கொடூரத்தைச் செய்த பின்னர், எதையும் அறியாதவர்கள் போல அர்மான் தனது தங்கையைக் கடத்திச் சென்றுவிட்டதாகக் காவல்துறையில் சகோதரர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், அவர்களின் முன்னுக்குப் பின் முரணான பேச்சால் சந்தேகமடைந்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மை அம்பலமானது. தற்போது உடல்கள் மீட்கப்பட்டு, காஜலின் மூன்று சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த உம்ரி கிராமத்தில் அரங்கேறிய இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கௌரவக் கொலைகள் பதிவானாலும், உண்மையான பாதிப்புகள் இதைவிட அதிகம் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
____________________________________________________________________________________________
In a tragic case of “honor killing” in Uttar Pradesh, India, a Hindu woman and her Muslim boyfriend were brutally murdered by the woman’s three brothers using a spade. The suspects initially tried to cover up the crime by filing a kidnapping complaint, but police uncovered the truth, retrieved the buried bodies, and arrested the brothers, sparking shock in a village previously known for religious harmony.