பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
பங்களாதேஷின் குமிலா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்ததும், அவர் வழக்கம்போல அந்தக் கடையிலேயே உறங்கியுள்ளார்.
நள்ளிரவில் அந்தக்கடை திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடைக்குள் இருந்து கருகிய நிலையில் அந்த இளைஞரின் உடலை மீட்டனர்.
ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என்று காவல்துறையினர் கருதினாலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகின. நள்ளிரவில் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், சஞ்சல் சந்திரா தூங்கிக்கொண்டிருந்த கடையின் ஷட்டரை வெளியில் இருந்து பூட்டியுள்ளனர். பின்னர் ஒருவர் கடையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுபாதகக் கொலை என்று இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளனர். தந்தையை இழந்த நிலையில், தனது தாய், உடல்நலம் குன்றிய அண்ணன் மற்றும் தம்பி என ஒட்டுமொத்த குடும்பத்தையும் சஞ்சல் சந்திரா ஒருவராகவே உழைத்து காப்பாற்றி வந்துள்ளார். இப்போது அவரை இழந்து அந்தத் தவிக்கின்றனர்.
பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் இத்தகைய தாக்குதல்கள் அந்நாட்டு இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
__________________________________________________________________________________________
A chilling incident has occurred in Bangladesh where a 23-year-old youth named Chanchal Chandra was burned alive after attackers locked him inside the shop where he worked and set it on fire. While initially thought to be an accident, CCTV footage revealed it was a premeditated murder, leaving his dependent family in despair and raising serious concerns about the safety of minorities in the country.