Skip to main content

Super Tamils

புட்டிப்பால் குடித்த ஒரு வயதுக் குழந்தை நுரை தள்ளி உயிரிழப்பு; அனலைதீவில் சோகம்

அனலைதீவில் புட்டிப்பால் குடித்துவிட்டு உறங்கிய ஒரு வயதுக் குழந்தை, வாயாலும் மூக்காலும் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

அனலைதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இனிசன் கிருத்திகா என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நேற்று காலை தாயார் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டி உறங்க வைத்துள்ளார். சில மணி நேரத்தின் பின்னர் குழந்தையின் வாயிலும் மூக்கிலும் நுரை வந்திருப்பதைக் குடும்பத்தினர் கவனித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தை உடனடியாக அனலைதீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகக் குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்