Skip to main content

Super Tamils

ஓமான் அருகே மசகு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்…! தீப்பற்றியது.

ஓமான் கடற்பரப்பிற்கு அருகே 2.5 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற பிரமாண்ட கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதில் தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

ஓமான் கடற்கரையிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியே அனுமதிக்கப்படாத பாதையில் இந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போதே இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த மேலதிக விவரங்கள் எவையும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்