Skip to main content

Super Tamils

சீரற்ற வானிலையால் லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயம் நாளை மூடப்படும்

வியாழக்கிழமை பிற்பகல் நிலவிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வெள்ளிக்கிழமை (02) பாடசாலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

பாடசாலையின் சுற்றுப்புறம், வகுப்பறைகள், கணினி அறை மற்றும் பிரதான மண்டபம் என்பவற்றுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் தற்போது அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாகக் காணப்படுகின்றது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பாடசாலையின் அதிபர் கிருஷ்ணராஜா, நுவரெலியா கல்வி வலைய பணிப்பாளருடன் கலந்துரையாடியே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

பாடசாலை வளாகம் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டு, சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னரே மீண்டும் வழமை போல் திறக்கப்படும் என்றும் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்