புட்டிப்பால் குடித்த ஒரு வயதுக் குழந்தை நுரை தள்ளி உயிரிழப்பு; அனலைதீவில் சோகம்
அனலைதீவில் புட்டிப்பால் குடித்துவிட்டு உறங்கிய ஒரு வயதுக் குழந்தை, வாயாலும் மூக்காலும் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்துள்ளது. அனலைதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இனிசன் கிருத்திகா என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று காலை தாயார் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டி உறங்க வைத்துள்ளார். சில மணி நேரத்தின் பின்னர் குழந்தையின் வாயிலும் மூக்கிலும் நுரை வந்திருப்பதைக் குடும்பத்தினர் கவனித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குழந்தை உடனடியாக அனலைதீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஊர்காவற்துறை […]