Skip to main content

Super Tamils

இன்று 7 மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை…! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்.

வெப்ப வானிலை எச்சரிக்கை 7 மாவட்டங்களுக்கு இன்று! வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை ஆகிய 7 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்ப வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இன்று (17) பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் வெயிலில் இருப்பது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோர்வை ஏற்படுத்துவதுடன், தொடர்ந்து செயலாற்றுவது உடல் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்துமாறும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The Department of Meteorology has issued a hot weather warning for seven districts—Vavuniya, Mullaitivu, Trincomalee, Polonnaruwa, Batticaloa, Ampara, and Monaragala—advising the public to stay hydrated and avoid prolonged outdoor activities as temperatures reach caution levels today.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்