Skip to main content

Super Tamils

காதல் பயணமா? கஞ்சா பயணமா? சொகுசு வாகனத்துடன் சிக்கிய இளம் ஜோடி..

சொகுசு காரில் கஞ்சா பொட்டலங்களைக் கடத்திச் சென்ற இளம் தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

புத்தளம் – சிலாபம் சாலையில் உள்ள பட்டுளுஓயா காவல் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த வாகனம் சிக்கியது.

காரை தீவிரமாகச் சோதனையிட்டபோது, அதற்குள் மிகச் சமர்த்தாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோ எடைகொண்ட கஞ்சா பார்சல்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் ராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞரும், 22 வயது இளம் பெண்ணும் பிடிபட்டுள்ளனர்.

இவர்கள் இந்தப் பெருந்தொகை கஞ்சாவைத் தணமல்விலைப் பகுதியில் இருந்துதான் கடத்தி வந்திருக்கிறார்கள் என்பது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன். ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாகப் மேல்விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்