Skip to main content

Super Tamils

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச கவனம்… நேரில் வரும் ஐரோப்பியத் தூதுவர் குழு!

யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிடுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் உட்பட நான்கு ஐரோப்பிய நாடுகளின் தூதுக்குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

குறிப்பாக, எதிர்வரும் புதன்கிழமை (22 ஆம் திகதி) பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் இணைந்து இந்த இடத்தைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இக்குழுவினர், 22 ஆம் திகதி செம்மணிப் புதைகுழிக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெறுவதற்காக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதேவேளை, தமது யாழ்ப்பாணப் பயணத்தின் போது, உள்ளூர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களையும் சந்தித்து தற்போதைய சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாட இக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

A delegation of ambassadors from four European nations and the European Union is scheduled to visit Jaffna to inspect the Chemmani mass grave site. Following their arrival on July 21st and pending court approval, they plan to visit the site on the 22nd, while also holding meetings with local political representatives and civil society activists.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்