Skip to main content

Super Tamils

அடுத்த ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடை

அரச பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டு பாடசாலை சீருடைத் தேவையை சீன அரசாங்கம் தனது அன்பளிப்பாக பூர்த்தி செய்யவுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்தத் திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஆவணப் பரிமாற்ற நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஷென்ஹொங் அவர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவிடம் உரிய சான்றிதழ்களைக் கையளித்தார்.

இந்த விசேட உதவித் திட்டத்தின் மூலம், இலங்கையில் உள்ள சுமார் 41.8 லட்சம் பாடசாலை மாணவர்களின் சீருடைத் தேவை முழுமையாக நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக 10.82 மில்லியன் மீட்டர் சீருடைத் துணிகளை சீன அரசு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கமைய, சீன அரசாங்கம் சுமார் 88.6 லட்சம் மீட்டர் துணியை முதன்முறையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The Chinese government has pledged to donate 10.82 million meters of fabric to provide free school uniforms for approximately 4.18 million students and monks across government, government-assisted, and Pirivena schools in Sri Lanka for the year 2027. This initiative, following a successful similar donation in 2023, reflects the ongoing educational support between the two nations.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்