அடுத்த ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடை
அரச பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டு பாடசாலை சீருடைத் தேவையை சீன அரசாங்கம் தனது அன்பளிப்பாக பூர்த்தி செய்யவுள்ளது. இந்தத் திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஆவணப் பரிமாற்ற நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஷென்ஹொங் அவர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவிடம் உரிய சான்றிதழ்களைக் கையளித்தார். இந்த விசேட உதவித் திட்டத்தின் மூலம், இலங்கையில் […]