Skip to main content

Super Tamils

இலங்கை – தமிழக கடல்வழியில் பதற்றம்… ஊடுருவல் அபாயத்தால் பாதுகாப்பு தீவிரம்!

தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் கடத்தல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கைக்கும் இந்த பகுதிக்கும் இடையில் மிகக் குறுகிய கடல் எல்லையே காணப்படுவதால், இந்த பாதுகாப்பு குறைபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையான தூரம் வெறும் 38 கிலோமீற்றர் மட்டுமே. இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 6ஆம் மணல் திட்டைப் பகுதியுடன் இந்திய எல்லை முடிவுக்கு வருகிறது.

இந்த மிகக் குறுகிய கடல் எல்லைப் பகுதியை சாதகமாகப் பயன்படுத்தி, இருநாட்டு கடத்தல்காரர்களும் எவ்வித தடையும் இன்றி எளிதாக ஊடுருவக்கூடிய சூழல் நிலவுவதாக எச்சரிக்கப்படுகிறது.

முன்னதாக, கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ஓலைக்குடா, வேர்க்கோடு மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் ஆகிய முக்கிய பகுதிகளில் காவல்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகாலமாக போதிய எண்ணிக்கையில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படாத காரணத்தால், இந்த மிக முக்கியமான கண்காணிப்புப் பணிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, தனுஷ்கோடியில் காவல்துறையினர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓய்வறை உடைந்து பாழடைந்து கிடப்பதுடன், அங்கு ஒரு காவல்துறை அதிகாரி கூட பணியில் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பலவீனமாக உள்ள இந்த சூழலால் கடல் வழியிலான கடத்தல்களும் ஊடுருவல்களும் கணிசமாக அதிகரித்துள்ளன. எனவே, தமிழகத்தில் தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கம், இந்த சோதனைச் சாவடிகளுக்கு உடனடியாக காவலர்களை நியமித்து கடலோரப் பாதுகாப்பை விரைந்து பலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social activists have raised alarms over the heightened risk of smuggling and illegal infiltration across the narrow 38-kilometer maritime border between Dhanushkodi, India, and Talaimannar, Sri Lanka. Indian media reports indicate that vital coastal police checkpoints in the Rameswaram and Dhanushkodi areas have been effectively abandoned over the last five years due to severe understaffing. Highlighting the derelict state of police facilities and the complete absence of personnel on duty, activists are urgently calling on the newly formed Tamil Nadu government to redeploy police officers to these checkpoints and fortify coastal security.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்