Skip to main content

Super Tamils

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்… 3 வயது குழந்தையை கொன்ற தாய்!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில் மூன்று வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவனது தாயும் அவருக்கு நெருக்கமான ஒரு நபரும் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தீகுல் கிராமத்தைச் சேர்ந்த சுவாமி – ஜோதி தம்பதியரின் மூன்று வயது மகனான ஹரிகிருஷ்ணா கடந்த மாதம் உயிரிழந்தார். இந்த மரணம் ஆரம்பத்தில் ஒரு சாதாரண விபத்து என்றே அனைவருக்கும் சொல்லப்பட்டது.

ஆனால், அன்று வீட்டில் என்ன நடந்தது என்று போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, அந்த பச்சிளம் குழந்தை வீட்டில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

கள்ளக்காதலனுடனான உறவுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கொன்ற தாய்

அடி தாங்க முடியாமல் குழந்தை மயங்கி விழ, பதறிப்போய் அவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்துதான் இறந்துவிட்டான் என்று உறவினர்களிடம் பொய் சொல்லி, உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்துள்ளனர்.

நாட்கள் நகர்ந்த நிலையில், வீட்டில் திடீரென ரத்தக் கறைகள் இருப்பதை கவனித்த குழந்தையின் தந்தை சுவாமிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே அவர் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதித்துப் பார்த்துள்ளார்.

அப்போது, குழந்தை இறந்த அன்று யாருக்கும் தெரியாமல் ஒரு மர்ம நபர் வீட்டிற்குள் வந்து சென்ற அதிர்ச்சியூட்டும் காட்சி அதில் பதிவாகியிருந்தது.

இதனால் நிலைகுலைந்த தந்தை உடனே போலீசில் புகார் அளித்தார். விசாரணையை கையில் எடுத்த போலீசார், தாயிடம் தங்களது பாணியில் விசாரித்தபோதுதான் இந்த கொடூரக் கொலையின் பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தன.

தற்போது, சொந்தக் குழந்தையையே கொன்ற அந்தத் தாயையும், அவருக்கு உடந்தையாக இருந்த அந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான மேல் விசாரணைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

A mother and her accomplice have been arrested in the Siddipet district of Telangana, India, for the murder of her three-year-old son, Harikrishna. Initially covered up as an accidental fall from a bed, the crime came to light a month later when the child’s suspicious father discovered bloodstains at home and checked CCTV footage, which revealed an outsider entering the house on the day of the incident. Subsequent police interrogation of the mother uncovered that the toddler was brutally assaulted and killed because he was an obstacle to her extramarital relationship.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்