Skip to main content

Super Tamils

AI தொழில்நுட்பங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு..

இந்தோனேசியா தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், தென்கிழக்கு ஆசியாவிலேயே ஏஐ தொழில்நுட்பத்தைப் பதிப்புரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வந்த முன்னோடி நாடாக இந்தோனேசியா திகழும். இந்த புதிய விதிகளின்படி, ஒரு படைப்பு முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தால், அதற்குப் பதிப்புரிமை பாதுகாப்பு கிடைக்காது. அதே சமயம், ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மனிதர்களின் நேரடிப் பங்களிப்புடன் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு மட்டும் சட்டப்பூர்வ […]

Read More

செயற்கை நுண்ணறிவு; மனித குலத்துக்கு அச்சுறுத்தலா?

செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கூறி, OpenAI நிறுவனத்தின் முக்கிய பொறியியலாளர் ஒருவர் பதவி விலகியது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளில் திருப்தியின்மை மற்றும் லாபத்திற்காக பாதுகாப்பை நிறுவனங்கள் புறக்கணிப்பதே இவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஏற்கனவே ‘அந்த்ரோபிக்’ நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவரும் இதே காரணத்திற்காக வெளியேறிய நிலையில், இப்போது OpenAI பொறியியலாளரும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போதிய கட்டுப்பாடுகள் இன்றி AI தொழில்நுட்பம் வளர்வது எதிர்காலத்தில் பாரிய […]

Read More

தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்கும் செயலி: சீனாவின் புதிய முயற்சி

மக்களின் தேவைகளை உணர்ந்து விதவிதமாகவும் விநோதமாகவும் செயலிகள் உருவாக்குவது இணைய உலகில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில், தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் நோக்கில் ‘Are You Dead’ எனும் புதிய செயலி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தும் நபர்கள், தாங்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்ய இதில் உள்ள ஒரு பிரத்யேக பொத்தானை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அழுத்த வேண்டும். ஒருவேளை பயனர் அந்தப் பொத்தானை அழுத்தத் தவறினால், அவர் […]

Read More

கண்ணாடிக்குள் மறைந்த கேமரா; பெண்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் மனித குலத்திற்கு நன்மைகளைத் தந்தாலும், மறுபுறம் அது பெண்களின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறி வருகிறது. மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஸ்மார்ட் கிளாஸ்’ (Smart Glasses) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொது இடங்களில் பெண்களுக்குத் தெரியாமலேயே அவர்களை ஆபாசமாகப் படம்பிடித்து இணையத்தில் கசியவிடும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்துள்ளன. சாதாரணக் கண்ணாடி போலவே காட்சியளிக்கும் இந்தச் சாதனத்தில் ரகசியமாகப் படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதி உள்ளது. இதனைத் தவறாகப் பயன்படுத்தும் சிலர், […]

Read More