Skip to main content

Super Tamils

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் பலி

கல்கமுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட 39 கந்த பகுதியில் நேற்று காலை ஒரு சோகமான விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் ஓடிக்கொண்டிருந்த டிராக்டரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே ஏற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அந்த டிராக்டரின் சக்கரத்திற்குள் சிறுவன் சிக்கிக்கொண்டார். இந்த விபத்து அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அந்தச் சிறுவன் உடனடியாக கல்கமுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. […]

Read More

நாட்டில் இன்று சீரான வானிலை

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நாட்டின் அநேகமான இடங்களில் வானம் தெளிவாகவும், சீரான வானிலையுமே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற சூழலே நிலவும். இருந்தபோதிலும், நாட்டின் தென் மாகாணத்தின் சில இடங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் அந்தப் பகுதி மக்கள் சற்றே அவதானமாக […]

Read More

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துஸ்பிரயோகம்; 5 ஆசிரியர்கள்

கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியர்களே வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. ஒரு ஆசிரியர் தொடங்கிய இந்த அராஜகம், பின்னர் மற்ற நான்கு ஆசிரியர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்களும் அந்தச் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். நீண்ட நாட்களாகத் தொடர்ந்த இந்தத் துயரத்தை அந்தச் சிறுமி அண்மையில் தனது பெற்றோரிடம் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உதவியை நாடினார். அக்குழுவினர் […]

Read More

தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசுவமடு புளியடி பகுதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடக்க முயன்ற பெண்மணி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தின் கோரத்தினால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Read More

டிஜிட்டல் அபாயம்; பெண்களை மிரட்டி காணொளி கோரிய இளைஞன்

இளம் பெண்களின் அந்தரங்கத்தை வேட்டையாடிய ஒரு நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் சிக்கியுள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாகத் திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் போலியான இணைய இணைப்புகளை உருவாக்கி, மிகத் தந்திரமான முறையில் பெண்களின் கைபேசிகளுக்குள் ஊடுருவி வந்துள்ளார். அங்கிருந்த தனிப்பட்ட வீடியோக்களைத் திருடி, பின்னர் வட்ஸ்அப் ஊடாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கே […]

Read More

உடனே அறிவிக்கவும்; பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்

களுத்துறை பகுதியில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரக் கொலை தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸாரும், குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். விசாரணைகளின் ஒரு கட்டமாக, 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இந்தச் சூழலில், குறித்த குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள […]

Read More

சங்கிலிப் பறிப்பு; இராணுவச் சிப்பாய் கைது

சுன்னாகம் நகரில் நேற்று காலை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரிடம் இராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அராஜகமான முறையில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து உடனடியாக சுன்னாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய போலீசார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன் பலனாக, மைலிட்டி இராணுவ முகாமில் பணியாற்றி வந்த சம்பந்தப்பட்ட சந்தேக நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். குறிப்பாக, சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய […]

Read More

இன்றைய வானிலை

தென் மாகாணத்திலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையோ அல்லது மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய தினத்திற்கான வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வரட்சியான வானிலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், […]

Read More

சுற்றுலா பயணி 6.2 லட்சம் திருட்டு; கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளர் மகள்

காலி, உணவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்யச் சுற்றுலாப் பயணியின் பணம் திருடுபோனது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அந்த விடுதி உரிமையாளரின் மகளைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் அறையில் ரகசியமாக வைத்திருந்த கேமராவில் பதிவான காட்சிகளே இந்தத் திருட்டைக் காட்டிக்கொடுத்துள்ளன. சந்தேக நபரான அந்த இளம்பெண், சுற்றுலாப் பயணிகள் இல்லாத நேரத்தில் பலமுறை […]

Read More

ஆபாசத் தளங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு; சிறுவர் பாதுகாப்பு

பிரித்தானியாவின் புதிய இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சிறுவர்கள் ஆபாசத் தளங்களை அணுகுவதைத் தடுக்க வலுவான வயது சரிபார்ப்பு முறைகளை ‘8579 LLC’ நிறுவனம் கையாளவில்லை என ஓஃப்கொம் குற்றம் சாட்டியுள்ளது. 2025 ஜூலை முதல் அமலுக்கு வந்த இந்தச் சட்ட விதிகளின்படி, 18 வயதிற்குட்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் “மிகவும் பயனுள்ள” தொழில்நுட்பங்களை அந்நிறுவனம் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அபராதத் தொகையுடன் சேர்த்து, கேட்கப்பட்ட தகவல்களை வழங்கத் தவறியதற்காக மேலதிகமாக 50,000 பவுண்டுகள் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

Read More