காதலர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு மதுபான கடை, குறிப்பிட்ட வகை வைன் பாட்டில்களை வாங்கினால் பீர் கேன்கள் இலவசம் என அதிரடி சலுகை ஒன்றை அறிவித்திருந்தது. இது 1970-ம் ஆண்டின் புதுச்சேரி மதுவரி விதிகளுக்கு எதிரானது என்பதால், சம்பந்தப்பட்ட கடை மீது அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மது அருந்துவதைத் தூண்டும் வகையில் இவ்வாறான விளம்பரங்களைச் செய்வது சட்டப்படி குற்றம் எனத் தெரிவித்த வருவாய்த்துறை அதிகாரி, கடை உரிமையாளருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார். மேலும், இந்த விதிமீறலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் இந்த இலவசச் சலுகை காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, அதிகாரிகள் அங்கு நேரடிச் சோதனையில் இறங்கினர். கடையில் விளம்பரப் பலகைகள் இல்லை என்றாலும், மக்கள் மத்தியில் பகிரப்பட்ட விளம்பரங்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
காதலர் தின கொண்டாட்டங்களின் போது மது நுகர்வை அதிகரிக்க இதுபோன்ற உத்திகளைக் கையாள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், மற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
______________________________________________________________________________
Excise officials in Puducherry have cracked down on a liquor store for offering a “Buy Wine, Get Free Beer” promotion for Valentine’s Day. The offer violated local excise rules of 1970 that prohibit advertising intended to encourage alcohol consumption. The owner now faces a potential fine of up to one lakh rupees after the promotion went viral on social media and television.