Skip to main content

Super Tamils

மனநலச் சுகாதார சட்டம்: முக்கிய தகவல் வெளியீடு

சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 100-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள மனநலக் கொள்கை நூறு ஆண்டுகள் பழமையானது என்பதால், அதனை நவீனமயப்படுத்துவது மிக அவசியம் என்று குறிப்பிட்டார். இதற்கான முதற்கட்ட சட்ட வரைவுப் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இந்த புதிய சட்ட வரைவு அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், இது குறித்து பொதுமக்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று, சட்டத்தை இறுதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________

Health Deputy Minister Dr. Hansaka Wijemuni announced that steps are underway to introduce a modern Mental Health Act to replace the current century-old policy. The preliminary draft has been completed and sent for Cabinet approval, after which public feedback will be sought to finalize the legislation.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *