Skip to main content

Super Tamils

தமிழர் பகுதியில் நள்ளிரவு சம்பவம்: மக்கள் அச்சம்

நிலாவெளி ஒன்பதாம் கட்டை சந்தியில் (26) ஆள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அங்குள்ள மூன்று கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்தத் திருட்டுச் சம்பவத்தில், ஒரு மரக்கறி கடையிலிருந்து மட்டும் சுமார் 30,000 ரூபா பணம் திருடப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட ஏனைய இரண்டு கடைகளிலும் எவ்வளவு பணம் அல்லது பொருட்கள் திருடுபோயின என்பது குறித்த மேலதிக விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தங்கள் கடைகளில் புகுந்து கொள்ளையிட்ட திருடர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பான சந்தைப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் இவ்வாறு துணிகரமாக நடந்திருக்கும் திருட்டுச் சம்பவம், அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

_______________________________________________________________________________________________

A series of burglaries occurred at the Ninth Milepost junction in Nilaveli, Trincomalee, where thieves broke into three shops under the cover of night. While one vegetable shop reported a loss of 30,000 LKR, the total damages to the other two stores are still being assessed, leaving the local business community in a state of alarm.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *