Skip to main content

Super Tamils

சுற்றுலா பகுதியில் திருட்டு: வெளிநாட்டு பெண்ணிடம் கைபேசி பறிப்பு

ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தனது கைபேசி திருடப்பட்டதாக அந்த வெளிநாட்டுப் பெண் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அந்த விசாரணைகளின் பலனாக சந்தேகநபர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அப்பெண்ணுக்குச் சொந்தமான பெறுமதிமிக்க கையடக்கத் தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. பிடிபட்ட நபர் மீது […]

Read More

8 மில்லியன் மதிப்புள்ள கார் திருட்டு: சந்தேக நபர் கைது

சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்று திருடப்பட்டமை குறித்து, கடந்த 2025.10.21 அன்று உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று கெஸ்பேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் உரகஸ்மன்ஹந்திய, யட்டகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Read More

தமிழர் பகுதியில் நள்ளிரவு சம்பவம்: மக்கள் அச்சம்

நிலாவெளி ஒன்பதாம் கட்டை சந்தியில் (26) ஆள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அங்குள்ள மூன்று கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவத்தில், ஒரு மரக்கறி கடையிலிருந்து மட்டும் சுமார் 30,000 ரூபா பணம் திருடப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட ஏனைய இரண்டு கடைகளிலும் எவ்வளவு பணம் அல்லது பொருட்கள் திருடுபோயின என்பது குறித்த மேலதிக விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு […]

Read More

துப்பாக்கி முனையில் தம்பதியரை மிரட்டி கொள்ளை: பரபரப்பு

இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி, கிட்டத்தட்ட ரூ.4 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து, பின்னர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அதுருகிரிய, போரலுகொட வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் நள்ளிரவில் பயங்கர கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கருப்பு நிற உடையணிந்து, முகத்தை மூடியபடி வீட்டிற்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட […]

Read More

கொழும்பில் அதிர்ச்சி: வீட்டுக்குள் புகுந்து கோடிக்கணக்கில் திருட்டு

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 18ஆம் திகதி அரங்கேறிய இந்த பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் பயனாக, கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை […]

Read More

யாழ் நகைக்கடையில் 10 கோடி ரூபா தங்கம் திருட்டு

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய 10 கோடி ரூபாய் பெறுமதியான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் வசித்து வந்த இந்த இளம்பெண், தான் வேலை பார்த்த நகைக்கடையிலேயே கைவரிசையைக் காட்டியுள்ளார். சிறுகச் சிறுக இவர் தங்கத்தை திருடி வந்ததாக தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணை எதிர்வரும் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை சிறையில் […]

Read More