இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், திருமணமான மூன்று மாதங்களுக்குள்ளேயே ஒருவர் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் ஓட்டலில் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தம்பதியினர் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக தனது மனைவியின் நடத்தையில் மாற்றங்கள் தெரிவதை கணவர் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, மனைவி தனது அலைபேசியில் பகிர்ந்த ‘லைவ் லொக்கேஷன்’ (Live Location) உதவியுடன், அவர் ஒரு ஹோட்டலில் இருப்பதை கணவர் கண்டுபிடித்தார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தினால், அவர் உடனடியாக அந்த ஹோட்டலுக்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு தனது மனைவி, அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு கணவர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக இது குறித்து அவர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், மனைவியுடன் இருந்த அந்த நபரைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அந்த நபர் பெண்ணின் சக ஊழியர் என்பதும், அவர்களுக்குள் நீண்ட காலமாக ரகசியத் தொடர்பு இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான குறுகிய காலத்திலேயே இத்தகைய சம்பவம் அரங்கேறியது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
_______________________________________________________________________________________
A shocking incident occurred in Meerut, Uttar Pradesh, where a husband caught his wife with her colleague at a hotel just three months after their marriage. Suspicious of her behavior, the husband tracked her via live location shared on her phone and alerted the police upon discovering her with another man. Authorities have launched an investigation following the husband’s formal complaint, making the incident a major topic of local discussion.