சீதுவ தம்பல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து சீதுவ பொலிஸார் விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், மற்றுமொரு சோகமான சம்பவமாக கல்னேவ நகரில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் உடனடியாக கல்னேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த அந்த நபர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவரது உடல் தற்போது அனுராதபுரம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
______________________________________________________________________________________
A man died due to electrocution in the Seeduwa Thambala area, and his body is currently at the Negombo Hospital mortuary while investigations continue. In a separate incident, an unidentified individual passed away after falling ill while waiting at a bus stop in Kalnewa town; his remains have been placed at the Anuradhapura Hospital.