கிரியுல்ல பகுதியில் குருநாகல் மாவட்டத்தின் 30 வயதான இளம் பட்டதாரி தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் 19 நாள் சிசு விழுந்து உயிரிழந்ததை அடுத்து, அந்த சிசுவின் தாயைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மகப்பேற்றுக்கு பிறகான மன உளைச்சல் காரணமாகவே இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சம்பவம் நடந்த போது வீட்டிற்குள் தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகிய மூவரும் இருந்துள்ளனர். திடீரென ஏதோ ஒரு சத்தம் கேட்கவே, பொறியியலாளரான தந்தை பதறியடித்துக் கொண்டு தேடியபோது, தாயும் குழந்தையும் கிணற்றில் விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கிணற்றில் விழுந்த அந்தப் பெண், அங்கிருந்த ஒரு குழாயைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறி உயிர் தப்பியுள்ளார். எனினும், பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் ஒருவித மனநல பாதிப்பு (Postpartum Depression) காரணமாகவே அவர் குழந்தையுடன் கிணற்றில் குதித்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சோகமான சம்பவம் குறித்து கிரியுல்ல பொலிஸார் தற்போது தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
_______________________________________________________________________________________________
A 30-year-old graduate mother has been arrested in Giriulla, Kurunegala, following the tragic death of her 19-day-old infant who fell into a well. Preliminary investigations suggest that the mother, who survived by climbing out using a pipe, may have jumped into the well with the baby due to postpartum depression; police are continuing further inquiries.