Skip to main content

Super Tamils

அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பது மற்றும் வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது குறித்து சுகாதார அமைச்சு ஏற்கனவே சில இணக்கப்பாடுகளைத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்த அமைச்சு தவறியதால், வேறு வழியின்றி இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விளக்கியுள்ளது.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகப் பொதுமக்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அத்தியாவசிய சேவைகளைக் கருத்திற்கொண்டு சில விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை நிலையங்கள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் எவ்வித தடையுமின்றி வழமைப்போல் தொடரும் என அந்தச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

________________________________________________________________________________________________

Government doctors across Sri Lanka have launched a 48-hour token strike starting today at 8:00 AM, citing the Health Ministry’s failure to implement agreed-upon solutions regarding free healthcare and doctors’ issues. However, to minimize public hardship, essential facilities including maternity, children’s, renal, and cancer hospitals will continue to operate as usual.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *