Skip to main content

Super Tamils

உலக சிறுவர் தினம் இன்று…! சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

சர்வதேச ரீதியிலும் இலங்கையிலும் உலக சிறுவர் தினம் இன்றாகும் (ஒக்டோபர் 01) அனுஷ்டிக்கப்படுகிறது. சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் இத்தினம் நினைவுகூரப்படுகிறது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தக்க காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி, இணையவழித் துஷ்பிரயோகங்கள், சமூக ஊடகச் சிக்கல்கள், சிறுவர் உழைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கல்வி சார்ந்த மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்குச் சிறுவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுடன் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது அவசியமாகும். மேலும், தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுப்பதற்கும் சமூகம் பொறுப்பேற்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்