Skip to main content

Super Tamils

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது…!

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் பொலிஸார் நேற்று (30) நடத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தலா 2 கிராம் வீதம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களில் 28 வயதுடைய நபர் சம்மாந்துறை மற்றும் வாழைச்சேனை பகுதிகளை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், இவர் ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் பலமுறை கைது செய்யப்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மற்றைய சந்தேகநபர் வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனரத்ன மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் வழிகாட்டலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்