Skip to main content

Super Tamils

மட்டக்களப்பு சித்தாண்டியில் இரு பிள்ளைகளின் தாய் கத்திக்குத்தில் உயிரிழப்பு…! கணவரைத் தேடும் பொலிஸார்

மட்டக்களப்பு சந்திாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவன் – வியாழக்கிழமை (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற பரிதாப சம்பவம் குறித்து சந்திவெளி பொலிசார் தகவல்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் தங்கராசா பிரதீபா என்பவர்தான் இந்தத் துயரச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான மூத்தவன் வாசன் என்பவரை, தங்கராசா பிரதீபா திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் ஒரு மகனும் மகளும் உள்ளனர். எனினும், கூலித் தொழிலாளியான கணவன் தினமும் மது அருந்திவிட்டு வீடு வந்து மனைதியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று அதாவது வியாழக்கிழமை (24) மனைவியின் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் சென்று விற்று, அந்தப் பணத்தில் மது குடித்துவிட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கணவனுக்கும் மனைவிக்குமிடையில் நீண்ட நேரம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி, சித்தாண்டி கலைமகள் வீதியில் வசிக்கும் தனது மாமியாளிடம் (கணவனின் தாயார்) கணவனின் கொடுமைகள் குறித்து முறையிடச் சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற கணவன், தனது தாயாரின் வீட்டிலேயே வைத்து மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாகப் பொலிஸ் அவசர சேவை 119-க்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மனைவியைக் கத்தியால் குதித்துவிட்டுக் கொலை செய்த கணவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகப் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, இந்தக் நபர் கடந்த மாதம் 24ஆம் திகதியும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், அவர் தீவிர மதுபோதைக்கு அடிமையாகியுள்ளாராம். உயிரிழந்தவரின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக நீதிவானின் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

A 32-year-old mother of two, Thangarasa Pradeepa, was fatally stabbed in the neck by her drug-addicted husband, Moothavan Vasan, at his mother’s house in Chengkalady, Batticaloa, following a domestic dispute over a sold mobile phone on Thursday evening.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்