கடந்த வாரம் திரைக்கு வந்து மக்களிடையே மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள ‘இம்மார்ட்டல்’ படத்தின் முதல் 3 நாள் கலெக்ஷன் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் அமைந்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்க, கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் ஜோடியாக முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சஸ்பென்ஸ் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ள இம்மார்ட்டல் படம், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ் தற்போது திரையரங்குகளில் 3 நாட்களைக் கடந்துள்ள நிலையில், உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முதல் 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 5 கோடி வசூலைக் குவித்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூல் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
The 3-day worldwide box office collection for the horror-thriller movie ‘Immortal’, starring G.V. Prakash Kumar and Kayadu Lohar and directed by Mariyappan Chinna, has reached Rs. 5 crore following its successful theatrical release on September 4.