Skip to main content

Super Tamils

நாட்டில் 95 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்…! 72 பேர் உயிரிழப்பு – வடக்கு, கிழக்கில் மீண்டும் பரவும் அபாயம் என எச்சரிக்கை.

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது தற்போது ஓரளவு டெங்கு பரவல், பரவிவந்த தீவிரமாக அண்மைக் காலமாக நாட்டில். எனினும் நாடளாவிய ரீதியில் இதுவரை 95 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு 72 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா ஷிரோமி தெரிவித்தார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

மேலும் எதிர்வரும் நாட்களில் வடகீழ் பருவப்பெயர்ச்சி ஆரம்பமாக உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுளம்பு பரவல் மீள அதிகரிக்க வாய்ப்புள்ளமையால் பொதுமக்கள் டெங்கு பரவல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் வைத்திய நிபுணர் பிரசீலா ஷிரோமி வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று புதன்கிழமை (2) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 95,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 72 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்தவர்களில் 21 பேர் ஆண்களாவதோடு 51 பேர் பெண்களாவர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்களும் உள்ளடங்குவர். அண்மைய காலமாக டெங்கு பரவல் தீவிரமடைந்திருந்து, நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டதோடு, தற்போது டெங்கு அபாயமிக்கப் பகுதிகள் 50 ஆக குறைவடைந்துள்ளன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஆரம்பத்திலிருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நுளம்பு குடம்பியல் ஆய்வின் போது நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. அத்தோடு கடந்த வருடம் டெங்கு 2 வைரஸ் நுளம்புகளால் நோய் பரவியிருந்ததோடு, இவ்வருடம் டெங்கு 3 வைரஸ் நுளம்புகளின் பெருக்கம் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்பட்ட பலவீனத்தால் நோய் பரவல் தீவிரமடைந்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் தொடர்ந்து கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது. நுளம்பு குடம்பி சோதனை நடவடிக்கைகளின் போது பாடசாலை வளாகங்களிலேயே, குடம்பிகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கழிவு முகாமைத்துவம் முறையாக இடம்பெறாது இருப்பதும் நுளம்பு பரவலுக்கான முக்கிய காரணமாக உள்ளது. ஆகையால் எதிர்வரும் பருவப்பெயர்ச்சியின் போது நுளம்பு பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதோடு, நோய் பரவலும் மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளமையால் பொதுமக்கள் இது குறித்து அவதானம் செலுத்துவது அவசியம் என்றார்.

Although the recent spike in dengue has been brought somewhat under control with over 95,000 cases and 72 deaths reported so far, health authorities urge the public to remain vigilant as upcoming seasonal rains could trigger a resurgence.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்