இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பிரீத்தி, தனது திருமணத்திற்குப் பிறகும் 62 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ராம் சிங்குடன் கள்ளக்காதல் உறவில் இருந்துள்ளார். ராம் சிங்குக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், லேகர் கோன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பிரீத்தியுடன் தங்கி வந்துள்ளார்.
பிரீத்தி அடிக்கடி பணம் கேட்டு ராம் சிங்குடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம் சிங், கடந்த வாரம் பிரீத்தியை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு பெரிய இரும்புப் பெட்டிக்குள் வைத்து, அதன் மீது விறகுகளைக் குவித்து தீ வைத்து எரித்துள்ளார். இதில் உடல் பாகங்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

உடல் பாகங்களை அப்புறப்படுத்தும் நோக்கில், ராம் சிங் ஒரு லோடு ஆட்டோவை வரவழைத்து, பூட்டிய இரும்புப் பெட்டியை அதில் ஏற்றி சிப்ரி பஜார் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கிடையில், இரும்புப் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ராம் சிங் அங்கிருந்து தப்பியோடியதைக் கண்டனர். அவர் விட்டுச் சென்ற இரும்புப் பெட்டியைக் கைப்பற்றித் திறந்து பார்த்தபோது, சாம்பலும் சில எலும்புத் துண்டுகளும் மட்டுமே இருந்தன. அவை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், ராம் சிங்கின் மனைவிகளிடம் விசாரணை நடத்துவதுடன், அவரது மகனுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள ராம் சிங்கை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
In a shocking incident in Jhansi, Uttar Pradesh, a 32-year-old married woman named Preeti was brutally murdered by her 62-year-old illicit lover, Ram Singh, a retired railway employee who already has two wives. Preeti was reportedly demanding money frequently, which angered Ram Singh. He allegedly beat her to death, dismembered her body, placed the parts in an iron trunk, and burned them with firewood. Later, he hired a load auto to dispose of the trunk, but the driver, suspicious of the foul smell, alerted the police. Ram Singh fled the scene, leaving behind the trunk, which contained only ash and bone fragments upon police inspection. Authorities have registered a case, are interrogating Ram Singh’s wives, and suspect his son’s involvement while actively searching for the absconding Ram Singh.