Skip to main content

Super Tamils

மனைவி முகப்பூச்சு பூசாததால் விபரீத முடிவு…! தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற இளம் குடும்பஸ்தர் 9 நாட்களின் பின் உயிரிழப்பு – நெடுங்கேணியில் சோகம்.

வவுனியா, நெடுங்கேணி, நையினாமடு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், எதிர்பாராத விதமாகத் தற்கொலை முடிவை எடுத்துத் தீ மூட்டித் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி, நைனாமடு கிராமத்தில் வசித்து வந்த அந்த இளைஞர், தனது மனைவியின் அழகுக்காக 1000 ரூபாய் மதிப்புள்ள முக வெண்மை கிரீம் ஒன்றை ஆசையாக வாங்கித் தந்துள்ளார். ஆனால், மனைவி அதனை முகத்தில் பூச மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான கோபத்தில், ஆத்திரமடைந்த கணவர் தன் மீதே மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொள்ள முயன்றுள்ளார்.

அதேவேளையில், அங்கிருந்த தம்பி முறையானவர் அதிர்ந்துபோய் அவரிடம் இருந்த தீ மூட்டும் கருவியைப் பிடுங்க முயன்றுள்ளார். அந்தப் போராட்டத்தின் நடுவே எதிர்பாராதவிதமாகத் தீ பற்றிக்கொள்ளவே, அந்த இளம் குடும்பஸ்தர் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் சிக்கி உடல் கருகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவசர அவரசமாக மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர் சிகிச்சைப் பலனின்றி 9 நாட்கள் போராடி இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நெடுங்கேணிப் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A young married man in Nedunkenakeeni, Vavuniya, tragically died after setting himself on fire following a domestic dispute that arose because his wife refused to use a skin-whitening cream he had bought her.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்