வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பிரபல குற்றவாளி ‘படோவிட்ட அசங்கவின்’ போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த தம்பதியினர், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்கு அருகில் வைத்து, மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் இந்தத் தம்பதியினரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் தெஹிவளை, படோவிட்ட (கட்டம் 5) பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தலை இயக்கி வரும் ‘படோவிட்ட அசங்க’ என்பவரின் வலையமைப்பை இலங்கையில் முன்னெடுத்து வந்த முக்கிய நபர்கள் இவர்களே என்பது விசாரணையில் அம்பலமானது. இவர்கள் தெஹிவளை பகுதியில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்தபடி நீண்டகாலமாக இந்த ஹெரோயின் கடத்தல் மோசடியை மிக இரகசியமாக நடத்தி வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இவர்களின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A couple working for the drug network of organized criminal “Badovita Asanga,” who is currently hiding abroad, was arrested near a private bank in Dehiwala. The suspects, residents of Badovita Stage 5, were found in possession of heroin. Investigations revealed that they had rented a luxury apartment in Dehiwala to carry out their illegal operations discreetly for an extended period.