Skip to main content

Super Tamils

ஆடிவேல் தேர் திருவிழா இன்று…! கொழும்பில் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை.

ஆடிவேல் தேர் திருவிழாவை 152ஆவது ஆண்டு புதிய கதிரேசன் ஆலயங்களின் பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பு – புறக்கோட்டை முனுமிட்டு, விசேட அறிவித்தலை காவல்துறையினர் விடுத்துள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்த ஆண்டு திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது! தேர்பவனி காரணமாக இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை குறிப்பிட்ட சில பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம், காலி வீதி, காலி முகத்திடல், செத்தம் வீதி, யோர்க் வீதி, பிரதான வீதி, செட்டி வீதி மற்றும் கதிரேசன் வீதி ஆகிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படலாம்.

இதன் காரணமாக, அந்தப் பக்கமாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எவ்வித சிரமமும் இன்றிப் பயணிக்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Police have issued a traffic advisory warning of heavy congestion across several Colombo routes, including Galle Road and Pettah, from morning until midnight due to the 152nd Aadi Vel Chariot Festival processions of the Wellawatte and Pettah New Kathiresan Temples, urging motorists to use alternative routes.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்