அஹங்கம பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இரண்டு பெண்களைக் கூரிய ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது குறித்துத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அஹங்கம பொலிஸார், இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இருப்பினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் கிடைக்காமல் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் 80 வயதுடைய முதியவர் எனத் தெரியவந்துள்ளது. மற்றொரு பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தத் தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் அஹங்கம, தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான பின்னணி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக அஹங்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
An 80-year-old woman died and another was injured after being attacked with sharp weapons inside a house in Thiththagalla, Ahangama. Police rushed the victims to the hospital following a tip-off, but the elderly woman succumbed to her injuries. A 52-year-old local suspect has been arrested in connection with the incident, while the motive for the attack remains under investigation.