இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருக்கும் காலங்களிலும் பயணிகளை ஈர்ப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்ட புதிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கோடை காலத்தில் ஸ்பெயின் மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வெளியேறுவதால், அந்தச் சந்தைகளைக் குறிவைத்து விசேட விளம்பரப் பணிகளை முன்னெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தின் தொடக்கமாக, இந்தியாவில் ஏற்கனவே சுற்றுலா ஊக்குவிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். இந்தியாவிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், அதிகளவில் செலவிடக்கூடிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 94,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், இது ஒரு சாதகமான தொடக்கம் என்றும் புத்திக ஹேவாவசம் சுட்டிக்காட்டினார்.
The Tourism Development Authority has launched a strategic program to meet this year’s tourism targets, specifically targeting European markets like Spain during off-peak seasons. Chairman Buddhika Hewawasam noted that after initial promotions in major Indian cities to attract high-spending travelers, the focus is expanding. The initiative comes on the heels of a successful start to 2026, with over 94,000 tourists visiting Sri Lanka in the first week of January alone.