கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது? இந்தியாவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தகவல் வெளியிட்டுள்ளார்.
இதன்படி பஞ்சாப்பில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் குறித்து தமது கட்சி ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மாதத்தைக் கடந்த இந்தப் போராட்டத்தின் முடிவில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
இந்தநிலையில் தாம் முன்னெடுக்கவுள்ள ஏனைய திட்டங்களையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.
Following the successful protest at Jantar Mantar over NEET examination irregularities and the subsequent resignation of Education Minister Dharmendra Pradhan, Cockroach Janta Party founder Abhijeet Dipke has announced that the party is planning its next steps, including potential demonstrations against exam paper leaks in Punjab.