பல்கலைக்கழக விழா காண சென்ற பட்டமளிப்பு ஆசையில் இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்
தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மஹியங்கனை – பதியதலாவ சாலையில் நடந்த விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.
மேலும் தெரியவந்த தகவலின்படி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தாலும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவர்கள் அக்குறணை, தலகஹ கந்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதான அஷ்கர் மற்றும் 32 வயதான ஸப்றான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Two young men from Akurana tragically lost their lives in a motorcycle accident along the Mahiyangana-Padiyathalawa road while traveling to attend a university convocation ceremony at the Southeastern University.