திரையில் பார்த்தாலே போதும் எங்கள் நாயகனை, கடைசியாக படம் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்றிலிருந்து கொண்டாட்டம் தான்.
ஜூலை 23 அன்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
வெளியான முதல் நாளிலேயே அனிருத், மமிதா பைஜு, படத்தின் தயாரிப்பாளர், கீர்த்தி சுரேஷ், அர்ஜுன் தாஸ், ஜீவா, த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி, சென்னையில் மட்டும் முதல் நாளில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரூ. 6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் ரூ. 29 முதல் ரூ. 30 கோடி வரை வசூலித்து மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் வேட்டையைத் தொடங்கியுள்ளது.
The film “Jana Nayagan,” directed by H. Vinoth and starring Vijay with a massive star cast and music by Anirudh, opened to massive celebrations across Tamil Nadu on July 23, grossing over Rs. 6 crores in Chennai and between Rs. 29 to 30 crores statewide on its very first day.