தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளிவந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் தான் ‘கட்டா குஸ்தி 2’. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் அண்மையில் ஒன்றுகூடி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு புத்தம் புதிய பிஎம்டபிள்யூ (BMW) காரும், இயக்குநர் செல்லா அய்யாவுக்கு தங்கச் சங்கிலியும் பரிசாக வழங்கப்பட்டன. அத்துடன், படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் தினசரி பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், வெளியாகி 11 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை உலகளவில் 45 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது.
Actor Vishnu Vishal’s latest blockbuster movie “Gatta Kusthi 2,” directed by Chella Ayyavu and produced by Vels Film International, has crossed the 45 crore LKR mark at the box office in just 11 days, making it the highest-grossing film of his career. To celebrate this massive success, the production team gifted a BMW car to the leading actor, a gold chain to the director, and silver coins to the entire crew.