50 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவின் வரலாற்றுப் பக்கங்களில் 1976ஆம் ஆண்டின் கோடைக்காலம் என்பது யாராலும் மறக்க முடியாத ஒரு காலகட்டமாகவே பார்க்கப்படுகிறது. அந்த ஆண்டில், அதாவது சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பதாக, தொடர்ந்து 14 நாட்களுக்கு மேல் வெயிலின் தாக்கம் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியிருந்தது.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போதைய கோடையில் வெயில் 15 நாட்களையும் கடந்து சுட்டெரித்து வருவதால், அந்த 50 ஆண்டுகால வரலாற்று சாதனையை பிரித்தானியா தவிடு பொடியாக்கியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். லெடிங் பல்கலைக்கழகத்தின் (University of Reading) வானியல் ஆய்வு மையமானது, கடந்த 1908ஆம் ஆண்டில் இருந்தே அங்கு நிலவும் வெப்பநிலை தொடர்பான விபரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ சார்ல்டன்-பெரெஸ் விவரிக்கும் போது, “கடந்த அரை நூற்றாண்டுகால வரலாற்றில், பிரித்தானியாவில் நிலவும் ஒவ்வொரு கடுமையான கோடைக்கால வெயிலையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒரு முக்கிய அளவுகோலாக 1976ஆம் ஆண்டே இருந்தது. ஆனால், இனி அந்த இடத்தை இந்த 2026ஆம் ஆண்டு பிடித்துக்கொள்ளப் போகிறது.
அன்று 1976இல் பதிவான 14 நாட்கள் என்ற சாதனையை முறியடித்து, இந்த வருடத்தில் இதுவரை 30 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் நிலவிய 15 நாட்களை நாங்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டின் கோடைக்காலம் முடிவடைவதற்குக் இன்னும் ஆறு வாரங்கள் மீதமிருக்கின்றன. இது தற்போதைய காலநிலை மாற்றம் குறித்த ஒரு மிக முக்கியமான விடயத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது” என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த வாரத்திலும் வெயிலின் தாக்கம் குறையாமல் இதே போன்ற வெப்பமான வானிலையே நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரவிருக்கும் சில நாட்களில் புதிய உச்சபட்ச வெப்பநிலை சாதனை ஒன்று பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Climate experts have revealed that the UK is currently experiencing its hottest period in recorded history, officially breaking a 50-year-old record set during the infamous 1976 heatwave. Data from the University of Reading shows that the country has already endured 15 consecutive days of temperatures exceeding 30°C in 2026, surpassing the previous 14-day record with six weeks of summer still remaining. As the heatwave is projected to persist through the week, experts warn that the UK is highly likely to set unprecedented new temperature records in the coming days.