சென்னையைச் சேர்ந்த தம்பதியர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த போது அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் தனியுரிமை மீறப்பட்ட சம்பவம் தொடர்பில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் அவரது கணவரும் உதய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘The Leela Palace’ ஹோட்டலில் ஒரு நாளைக்கு 55,000 ரூபாய் வாடகையில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் குளியலறையில் இருந்த சமயத்தில், ஹோட்டல் ஊழியர் ஒருவர் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி அநாவசியமாக அறைக்குள் நுழைந்துள்ளார். தம்பதியினர் உள்ளே வரவேண்டாம் என எச்சரித்தும், அந்த ஊழியர் குளியலறை துவாரம் வழியாக எட்டிப் பார்த்ததாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
![]()
இந்த அநாகரீகமான செயலால் தங்களின் தனிப்பட்ட சுதந்திரம் பறிபோனதுடன், பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி அந்தத் தம்பதியினர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹோட்டல் நிர்வாகத்தின் தவறை உறுதி செய்தது. அதன்படி, அந்த ஹோட்டலை நிர்வகிக்கும் ‘Schloss Udaipur Private Limited’ நிறுவனம் பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் நில்லாமல், அவர்கள் தங்கியிருந்த அறைக்கான வாடகைத் தொகையை 9 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்றும், வழக்குச் செலவுக்காக 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மொத்தத் தொகையையும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.
A consumer court has ordered a luxury hotel in Udaipur to pay ₹10 lakh in compensation to a Chennai-based couple for violating their privacy. The couple, staying at ‘The Leela Palace’, reported that a hotel staff member entered their room using a master key while they were in the bathroom and peeped through a hole. The court ruled in favor of the couple, directing the hotel management to refund the room rent with interest and cover legal costs within two months.