தென் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 50 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு பேர் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் உறுதிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 14 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர, 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்களையும் பொலிஸார் அவர்களிடமிருந்து மீட்டுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மிகத் திட்டமிட்ட முறையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. பிடிபட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவர்களுக்குப் பின்னால் உள்ள வலையமைப்பைக் கண்டறிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
__________________________________________________________________________________________________________________________________
Police arrested four suspects, including a woman, yesterday evening in Ahungalla and Ambalangoda for the possession of narcotics valued at over 500 million rupees. Authorities seized 13 kg of Ice, 14 kg of Heroin, and 30 rounds of 9mm ammunition during the raid, with further investigations currently underway by the Ahungalla Police.