மாதம்பை – குளியாப்பிட்டி வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தாய் படுகாயமடைந்துள்ளார்.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்
தும்மலசூரிய, வீரகொடியான பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த பிள்ளைகளின் தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் மாதம்பைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்