Skip to main content

Super Tamils

குடும்ப கொடுமை: வயோதிப தாயை கொடூரமாக தாக்கிய இளைய மகன்

இரத்தினபுரியில் பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் தாய் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த தாய், தற்போது சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்தத் தாய்க்கு 52 வயது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த மூத்த மகன், சந்தேக நபரான தனது இளைய சகோதரனைத் தாக்கியுள்ளார். இதில் அந்த இளைய மகனும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

__________________________________________________________________________________________________

A 52-year-old mother in Balangoda, Ratnapura, was hospitalized after being brutally attacked by her younger son. In a turn of events, the elder son reportedly attacked his younger brother in anger following the incident, and Balangoda police are currently conducting further investigations.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *