Skip to main content

Super Tamils

பணம் அனுப்பாத மனைவியை மிரட்ட பிள்ளைகள் மீது கொடூர தாக்குதல்…! வைரலான காணொளியால் சிக்கிய 25 வயது தந்தை கைது.

பலாங்கொட, பின்னவல பகுதியை சேர்ந்த 25 வயதான இளம் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

4 வயதான சிறுமி மற்றும் 7 வயதான சிறுவனை, சந்தேகநபர் மோசமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. வெளிநாட்டில் உள்ள தன் மனைவியிடம் பணம் கேட்டுத்தான் அவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள் பணம் அனுப்பவில்லை என்றால் அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் அந்த நந்தை மிரட்டியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அந்தச் சந்தேகநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸார் தங்களின் தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

A 25-year-old father in Balangoda, Pinnawala was arrested by police after a video of him brutally assaulting his young children to demand money from his wife abroad went viral on social media, with the rescued children now receiving medical treatment.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்