Skip to main content

Super Tamils

அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு…! ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு, மொத்தமாக 9,241,892,500 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது. அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு, 2,321,735,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவுகள் பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

The Welfare Benefits Board has announced that the August Aswesuma welfare payments will be credited directly to the bank accounts of over 1.2 million beneficiary families across the first and second phases.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்