Skip to main content

Super Tamils

லீக் ஆனாலும் லெவல் குறையவில்லை… 230 கோடி வசூல் செய்த ‘ஜன நாயகன்’..!

வரலாற்றிலேயே இதுவரை எச்.வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம்! திரையுலக வரலாற்றிலேயே யாரும் பார்க்காத ஒரு பிரம்மாண்ட வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

படம் ரிலீஸாவதற்கு முன்பே முழுப்படமும் இணையத்தில் லீக் ஆகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “அவ்வளவுதான் படத்தின் வசூல் முடிந்துவிட்டது ” என ஏனையவர்கள் எதிர்பார்த்த வேளையில், தளபதியின் அசைக்க முடியாத இரசிகர்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்து, படத்தைத் தங்கள் தோள்களில் தாங்கிப் பிடித்து மாபெரும் வெற்றிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்! சினிமா வரலாற்றுலேயே முழுப்படம் லீக் ஆன பிறகும், தியேட்டரை திருவிழா ஆக்கி இந்த அளவுக்கு வசூல் மழை பொழிய வைத்தமை இதுவே முதல்முறை! எந்தப் போட்டித் திரைப்படங்களும் இல்லாததால், திரையரங்குகளில் ‘ஜன நாயகன்’ முதல் 4 நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸை சுக்குநூறாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வசூல்: ₹150 + கோடி வெளிநாட்டு வசூல்: ₹80 + கோடி மொத்த உலகளாவிய வசூல் : ₹230 கோடி+ தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், திரையரங்குகளில் இரசிகர்களின் கொண்டாட்டம் எல்லையைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. தடைகளைத் தவிடுபொடியாக்கி, வசூலில் ₹250 கோடி மைல்கல்லை நோக்கி அதிவேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறான் இந்த ‘ஜன நாயகன்’!

Despite a major online leak prior to its release, Thalapathy Vijay’s final film ‘Jana Nayagan’ directed by H. Vinoth has defied all expectations, creating box office history and racing towards the ₹250 crore milestone through overwhelming fan support.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்