Skip to main content

Super Tamils

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணத்தில் புதிய திருப்பம்… பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு வாக்குமூலம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கியால் சுட்டு மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபடத் தயாரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, துரதிர்ஷ்டவசமாகத் தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

நேற்று காலை 7 மணியளவில் உடற்பயிற்சி செய்யத் தனது அறையிலிருந்து வெளியே வந்த அவர், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கியைக் கேட்டுப் பெற்றுள்ளார். துப்பாக்கியை வாங்கியவர், அதிகாரியிடம் தண்ணீர் கொண்டு வருமாறு பணித்திருக்கிறார். அந்த அதிகாரி சமையலறைக்குச் சென்ற தருணத்தில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே ஓடிச் சென்ற அதிகாரி, விக்ரமரத்ன துப்பாக்கிக் காயங்களுடன் தரையில் சரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்தபோது, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவர் கடமையில் இருந்துள்ளார். விக்ரமரத்ன தன்னைச் சுட்டுக்கொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கியதாகும். சம்பவம் நடந்தபோது, அவரது மனைவியும் இளைய மகனும் வீட்டிலேயே இருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அவரை முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் கிடந்த துப்பாக்கியைப் பொலிஸார் மீட்டுள்ளனர். விக்ரமரத்னவின் மகனின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரி அளித்த பரபரப்பு வாக்குமூலம் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தது. சாரா ஜேஸ்மினின் டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகளை உறுதிப்படுத்துமாறு கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக, அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. நீண்ட காலமாக ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் அவர் இருந்ததால், இது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

சாரா ஜேஸ்மின் மரணத்தை உறுதிப்படுத்தும் மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனை, விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபராக இருந்த காலத்திலேயே நடைபெற்றது. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு பதில் பொலிஸ் மா அதிபராகப் பொறுப்பேற்ற அவர், பின்னர் 2020 முதல் 2023 வரை நிரந்தர பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றினார். ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் மூன்று முறை இவருக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Former Inspector General of Police (IGP) C. D. Wickramaratne passed away after shooting himself at his residence in Thalahhena, Malabe. According to the security officer on duty, Wickramaratne requested his service weapon and asked the officer to fetch water before the incident occurred. While investigations are exploring personal stressors, such as family issues, and his recent involvement in statements regarding the Easter Sunday attack investigations, the exact motive behind his tragic decision remains under investigation.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்