தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மட்ட கபடிப் போட்டியில், யாழ்ப்பாணப் பெண்கள் அணி கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசிய ரீதியில் முதலிடத்தைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு மதிப்பளிக்கும் வகையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
நாடு முழுவதிலுமிருந்து 26 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த வலுவான போட்டியில், யாழ்ப்பாண மகளிர் அணி தனது திறமையை நிரூபித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண அணியும் கிளிநொச்சி அணியும் மோதிக்கொண்டன. இதன் மூலம், இறுதிப் போட்டியில் வடமாகாணத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தியது அந்தப் போட்டியின் சிறப்பம்சமாக அமைந்தது.
வெற்றி வாகை சூடித் திரும்பிய வீராங்கணைகளை மாவட்ட செயலகத்தின் பிரதான வாயிலில் வைத்து உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, அவர்களுக்கு மாலை அணிவித்து பதக்கங்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
The Jaffna women’s kabaddi team was honored at the Jaffna District Secretariat by District Secretary Maruthalingam Pratheepan for securing first place in a national-level tournament organized by the National Youth Services Council. The event was particularly notable as two teams from the Northern Province, Jaffna and Kilinochchi, competed against each other in the finals, highlighting the region’s sporting excellence.