வடக்கில் அனுமதியின்றி இயங்கும் மாணவர் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.
வடக்கு மாகாணத்தில் உரிய அனுமதியின்றி மற்றும் தகுதியற்ற முறையில் இயக்கப்படும் மாணவர் போக்குவரத்துப் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை எச்சரித்துள்ளது. அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 15 வருடங்களுக்குட்பட்ட பழமையானவையாக இருக்க வேண்டும் என்பதுடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மாணவர்களுக்கான கட்டணச் சலுகைகளை வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. […]